1126 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
9/24/2022 5:52:12 AM
கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(25ம் தேதி) 1126 மையங்களில் மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை 1126 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோன தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில், காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், தங்கள் வீட்டையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 18 முதல் 59 வயதிற்குபட்ட நபர்கள் 182 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை வரும் 30ம் தேதி வரை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!