1928 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
9/24/2022 5:51:20 AM
தர்மபுரி, செப்.24: தர்மபுரி மாவட்டத்தில் நாளை, 1928 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நாளை(25ம் தேதி) 1928 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 38வது மெகா தடுப்பூசி முகாம நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 12 வயதுக்கு மேல் உள்ள 11.99 லட்சம் நபர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 10.80 லட்சம் நபர்களுக்கு 2ம் தவணை கொரோனா தடுப்பூசியும் மற்றும் 1,58,002 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், இதர அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள்,
கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு சுகாதார மையங்களுக்கு சென்று தவறாமல் “பூஸ்டர் டோஸ் தடுப்பூசி” இலவசமாக செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள், கொரோனா அறிகுறி தென்பட்டால், அவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பைனான்ஸ் நிறுவனத்தில் ₹1 லட்சம் திருட்டு
பச்சிளங்குழந்தை திடீர் சாவு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக ஒன்றிய,நகர நிர்வாகிகள்
திமுக செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு
கடத்தூரில் திமுவினர் கொண்டாட்டம்
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!