லாட்டரி, கஞ்சா விற்ற 4 பேர் கைது
9/24/2022 5:06:41 AM
திருப்பூர்,செப்.24: திருப்பூர் பிஎன் ரோடு பாண்டியன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (24) என்பது தெரியவந்தது. மேலும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அனுப்பர்பாளையம் எஸ்ஏபி சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக சௌந்தரராஜன் (59) என்பவரை கைது செய்து 90 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் பிஎன்ரோடு போயம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த பாண்டி (35), ஜெகன் (32) என 2 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
3 சட்டமன்ற தொகுதிகளில் 51.08 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!