நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
9/24/2022 4:50:37 AM
திருச்சி, செப்,24: திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் கடந்த 9 .8 .22 தேதி டிபன் கடை நடத்தி வரும் ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருப்பதாக பெறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதன் (40 )என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சாமிநாதன் மீது காரில் ஒருவரை கடத்தி, பணம் மற்றும் செல்போன் பறித்த ஒரு வழக்கு உட்பட 6 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு அருகில் கடந்த 20.8.22 ம் தேதி அன்று ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை,பணம் மற்றும் செல்போன் பறித்ததாக அரவிந்த் என்கின்ற ஜம்பார் (20) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஜம்பார் மீது 4 மேலும் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜம்பார் மற்றும் சாமிநாதன் ஆகியோரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்வு செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!