SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூரில் காய்கறி விலை உயர்வு

9/24/2022 4:27:38 AM

பெரம்பலூர், செப்.24: பெரம்பலூரில் புரட்டாசி பேரைச் சொல்லி காய்கறி விலையை அதிகரிக் கும் வியாபாரிகள். அவரை, கேரட், பீன்ஸ், சுண்டை, முரு ங்கை, காலிபிளவர் சதமடி த்தன. இறைச்சிவிலை இறங்கியபாடில்லை. அறிவியல் ரீதியாக, சூரிய வெப்பத்தின் தாக்கமானது புரட்டாசி மாதம் குறைந்து காணப்படும். மேலும், சூடாக இருந்த பூமி மெள்ள மெள்ள குறைந்து குளிர் நிலைக்கு மாறிவரும். இந்த நேரத்தில் அசைவ உணவை தவிர்ப்பதே, இந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்பம் மிகுந்த நாடுகளுக்கு பொருத்தமானது. இருந்தும் புரட்டாசி மாதத்தில் இறைச்சி விலையும் குறைவில்லை. இந்நிலையில் காய்கறி விலை எகிறியது. குறிப்பாக அவரை, கேரட், பீன்ஸ், சுண்டை, முருங்கை, காலிபிளவர், மாங்காய் ஆகியன சந்தையைத் தவிர, பிற இடங்களில் மார்க்கெட், வண்டி வியாபாரிகளிடம் சதமடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கொத்தவரங்காய், பீர்க்கன்காய், பாகற்காய், கொத்தமல்லிக் கட்டு, பச்சை மிளகாய், சேப்பங்கிழங்கு, பீட்ரூட் ஆகியன ஒரு கிலோ ரூ.80க்கு மேல் எகிறியுள்ளது. இதனால் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தால் வருத்தத்திலும் நடுத்தர வர்க்கத்தினர் நஷ்டத்திலும் உள்ளனர். ரூ.10க்கு விற் பனை செய்கிற கீரைகளும் ஒரு கட்டு ரூ.15, ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் வயல்களில் விதைத்து அறுவடைசெய்து கொண்டுவரும் விவசாயிகளுக்கு இந்த விலையேற்றத்தால் எந்த லாபமும் இல்லை. புரட்டாசி என்றால் வியாபாரிகள் மட்டுமே தினமும் திருப்தியாக செல்கின்றனர். விவசாயிகள் விரக்தியாகவே செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்