ஆவணமின்றி இயங்கிய 8 ஆட்டோக்கள் பறிமுதல்
9/24/2022 4:10:54 AM
பண்ருட்டி, செப். 24: பண்ருட்டி நகரத்தில் ஆட்டோக்கள் அதிக அளவு செல்கின்றன. ஒவ்வொரு ஆட்டோ உரிமையாளர்கள் முறையாக ஆவணம் இன்றி ஓட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் ஆகியோரின் அறிவுரையின்படி நேற்று பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து ஆய்வாளர் பரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து நகரம் முழுவதும் திடீர் ஆய்வு செய்தனர். அதில் எவ்வித ஆவணம் இன்றி ஆட்டோ ஓட்டுதல், உரிமை இல்லாதவை, திருச்சி, கோயும்புத்தூர் பகுதியிலிருந்து ஆவணமின்றி எடுத்து வந்து பண்ருட்டியில் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுபவர்கள் ஆட்டோ முன் பகுதியில் பயணிகளை உட்கார வைத்து ஓட்ட கூடாது. யூனிபார்ம் அணிய வேண்டும். அனைத்து ஆவணமும் வைத்திருக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
மின்துறை தனியார் மயம் கண்டித்து மாநிலம் முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு
கடலூர் மாவட்டத்துக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்
திட்டக்குடி அருகே வீட்டு சுவற்றில் துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை
புதுவை அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!