துபாயில் மாயமான கணவரை கண்டுபிடித்து தர வேண்டும்
9/24/2022 4:10:45 AM
வேப்பூர், செப். 24: வேப்பூர் அடுத்த பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த எரசர் மகன் தேவர் (54). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது. மகேஸ்வரியின் கணவர் தேவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் நாட்டிற்கு சென்றவர் அங்கு தனியார் நிறுவனத்தில் லேபராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம்தேதி அவரது மனைவி மகேஸ்வரி தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து அவருடைய அறை நண்பர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது வேலைக்கு சென்றவர் இன்னும் தங்கியிருக்கும் அறைக்கு வரவில்லை. அவருடைய செல்போன் அறையிலே வைத்து சென்றுள்ளதாகவும், தேவர் காணவில்லை என அவரது படம் நண்பர்கள் துபாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதையும் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தேவர் மனைவி மகேஸ்வரி துபாயில் வேலைக்கு சென்று காணாமல்போன தனது கணவரை மீட்டுதரக்கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
மின்துறை தனியார் மயம் கண்டித்து மாநிலம் முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு
கடலூர் மாவட்டத்துக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்
திட்டக்குடி அருகே வீட்டு சுவற்றில் துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை
புதுவை அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!