SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞர்கள்

9/24/2022 4:10:35 AM

வடலூர், செப். 24:  வடலூரில் பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்கள் கூட்டத்தின் ரகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு பாதுகாப்பாக வர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடலூர் அருகே பார்வதிபுரம், காட்டுகொல்லை, ஆபத்தாரனபுரம், சேராக்குப்பம், கல்லுக்குழி, கருங்குழி, நெத்தனாங்குப்பம், மருவாய் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சில் வடலூர் வந்து உயர்கல்வி கற்று செல்கின்றனர். பல மாணவிகள் சைக்கிளில் வருகின்றனர். மாணவிகளை குறி வைத்து இளைஞர்கள் கூட்டம் கேலி, கிண்டல் செய்வதும், நடந்து வரும் மாணவிகளை பார்த்து டூவீலர்களில் வரும் இளைஞர்கள் கூட்டம் பைக்கில் உட்காரு பள்ளியில் கொண்டு போய் விடுகிறேன் என மிரட்டி வருகின்றனர்.

குறிப்பாக வடலூர் பேருந்து நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள சாலையில் பெட்டிக்கடைகள், டீக்கடைகள், பேருந்து நிலையத்தில் உள்ள கட்டைகளில் அமர்ந்து கொண்டு காலையும், மாலையும் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்வதால், மாணவிகள் மன உளைச்சல் ஏற்பட்டு பீதியுடனும் பள்ளிக்கு வரும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. மாணவிகள் புகார் கொடுக்கவும் பயந்து வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள், பெரியவர்கள் தட்டி கேட்டால், அவர்களை இளைஞர்கள் கூட்டம் போதையில் அசிங்கமாக பேசுவதால், இளைஞர்களை கண்டிக்க பயந்து வருகின்றனர். எனவே மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவிகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படும். இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்