சிதம்பரம் நடராஜர் கோயிலில் 16வது நாளாக நகை சரிபார்ப்பு ஆய்வு பணி
9/24/2022 4:10:00 AM
சிதம்பரம், செப். 24: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த சில தினங்களாக நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 22ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக இதுவரை 15 நாட்கள் நகை சரிபார்ப்பு ஆய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று 16வது நாளாக நகை சரி பார்ப்பு ஆய்வு பணி நடந்தது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இரண்டு நாட்கள் நடைபெறாது மீண்டும் 26ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
மின்துறை தனியார் மயம் கண்டித்து மாநிலம் முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு
கடலூர் மாவட்டத்துக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்
திட்டக்குடி அருகே வீட்டு சுவற்றில் துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை
புதுவை அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!