SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பொன்னை அருகே சிகிச்சைக்கு சென்றவர் முதியவரை அடித்து கொன்று முட்புதரில் சடலம் வீச்சு? போலீசார் விசாரணை

9/23/2022 6:10:23 AM

பொன்னை, செப்.23: பொன்னை அருகே சிகிச்சைக்கு சென்ற முதியவர் தலையில் பலத்த காயங்களுடன் முட்புதரில் சடலமாக வீசப்பட்டு கிடந்தார். அவரை யாராவது அடித்து கொலை செய்து வீசினார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் கூட்ரோட்டில் பழைய போலீஸ் செக்போஸ்ட் பின்புறம் முட்புதரில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொன்ைன போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ னிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, முதியவரின் தலையில் பலத்த காயம் இருந்தது. பின்னர், அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை எடுத்து பார்த்தபோது ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் அருந்ததி காலனியை சேர்ந்த கிருஷ்ணன்(67) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கிருஷ்ணன் நேற்று முன்தினம் காலை வீட்டில் பொன்னையில் தனியார் மருத்துவரிடம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து இறந்த கிருஷ்ணனின் மகன் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் முதியவர் வீட்டிற்கு வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து முட்புதரில் சடலத்தை வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்