SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்காணிப்புக் குழு கூட்டம்

9/23/2022 5:55:52 AM

சிவகங்கை, செப்.23: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகித்தார். கண்காணிப்பு குழுத் தலைவர் சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தலைமை வகித்து பேசியதாவது: பல்வேறு திட்டங்களின் பயன்கள், நிதிநிலை மற்றும் செலவினங்கள், தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மிக குறைவாக பணிகள் வழங்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத்தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை எம்பி ப.சிதம்பரம், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சிமன்ற தலைவர் மணிமுத்து மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்