SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான தகுதி தேர்வு

9/23/2022 5:00:32 AM

தர்மபுரி, செப்.23: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் ராணுவ கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான தகுதித்தேர்வில் பங்கேற்க வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ கல்லூரியில், 2023ம் கல்வி ஆண்டில் 8ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான தகுதித்தேர்வு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 11 வயதுக்கு குறையாமலும், 13 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 2.7.2010க்கு முன்போ 1.1.2012க்கு பின்னரோ பிறந்திருக்க கூடாது. இந்த தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவம், தகவல் கையேடு மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்கள் பெற பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600ம், எஸ்சி- எஸ்டி பிரிவினர் சாதி சான்றிதழுடன் ரூ.555-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை தி கமாண்டன்ட், ஆர்ஐஎம்சி டேராடூன், டிராவி பிரான்ச், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேராடூன்(பேங்க் கோடு 01576) உத்தரகாண்ட் என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து ராஷ்டிரியா இந்தியன் மிலிட்டரி காலேஜ், கார்கி காண்ட், டேராடூன் உத்தரகாண்ட், 248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் விண்ணப்பதாரரின் முழு முகவரி, பின்கோடு, செல்போன் எண் அல்லது தொலைபேசி எண் குறிப்பிடப்பட்ட கடிதத்தை அனுப்பி தேர்வுக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரட்டை படிவங்களாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை 600003 என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்