ஆலவயல் பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்
9/23/2022 3:56:25 AM
பொன்னமராவதி, செப். 23: பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைபள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் வருவாய்த்துறை சார்பில் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன் முன்னிலை வகித்தார். பொன்னமராவதி துணை தாசில்தார் சேகர் பேரிடர் மேலாண்மை தொடர்பான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராமு, கிராம நிர்வாக அலுவலர்கள் ரமேஷ், ராஜேந்திரன், ஆசிரியர்கள் ரமேஷ், ராமசாமி, கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கான பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நடைபெற்றது.
செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பற்றி விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு போட்டி நடத்தி ஊராட்சித் தலைவர் திவ்யா முத்துக்குமார், தலைமையாசிரியர் சரவணன், ஆசிரியை சீதாலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் மாணவர்களுக்கு பரிசு வழங்கி இடி மின்னலின் போது குடையை பயன்படுத்த கூடாது. மின்னல் தாக்கத்தின் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது, நீச்சல் அடிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொது மக்களை எவ்வாறு மீட்பது பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
சாத்தனூரில் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா
அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு பெருங்களூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச்
ஆலங்குடி அருகே இருதரப்பு மோதலில் 15 பேர் மீது வழக்கு
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதியில் தைலமர காட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டையில் மகளிர் கவியரங்கம்
கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்