SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்காலில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

9/23/2022 3:43:20 AM

காரைக்கால், செப்.23: புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி பேருந்து நேற்று மதியம் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் இருந்து காரைக்கால் நோக்கி 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஆட்சியப்பன் என்ற ஓட்டுனரும், நடத்துனராக துரைராஜ் பணியில் இருந்தனர். பேருந்து காரைக்கால் அருகே பச்சூர் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் வந்த இருவர் திடீரென பேருந்தின் மீது கல்லை கொண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்ததில், கண்ணாடி துகள்கள், பேருந்தின் முன் வரிசையில் அமர்ந்து இருந்த பெண் பயணி மீது விழுந்தது.

இதில் அவருக்கு முகம், கைகளில் சிறிது காயம் ஏற்பட்டது. மேலும் ஓட்டுநர் ஆட்சியப்பனுக்கும், சிறு காயங்கள் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பேருந்து மீது கல்வீசி பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. வந்த மர்ம நபர்கள் இருவரும் கல்வீச்சில் ஈடுபட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்தனர். பேருந்து மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்