SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு காப்பீடு அடையாள அட்டை

9/23/2022 3:42:27 AM

நாகப்பட்டினம், செப்.23: வேளாங்கண்ணியில் மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். வேளாங்கண்ணியில் மாற்றுதிறனாளிகள் வசிக்கும் நிர்மலா அன்பு இல்லத்தில் 30 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை கலெக்டர் அருண்தம்புராஜ், அவர்கள் வசிக்கும் இல்லத்திற்கு நேரடியாக சென்று வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 85 ஆயிரத்து 406 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.162 கோடியே 596 லட்சம் மதிப்பில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 628 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைபெற தேவையான நடவடிக்கையினை எடுக்கப்படும் என்றார். இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜோஸ்பின்அமுதா, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்