SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் பாதுகாப்பு சாதனங்களுடன் முன்னெச்சரிக்கையாக இருங்கள்

9/23/2022 3:42:09 AM

மயிலாடுதுறை,செப்.23: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை துவங்க உள்ளதால் பாதுகாப்பு சாதனங்களுடன் அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் லலிதா பேசியதாவது: காவல்துறை மூலம், காவல் தீயணைப்பு, கடலோர காவல் படை, பேரிடர் மீட்பு படை, ஊர் காவல் படை, தேசிய மாணவர் படை, ஆகிய பிரிவினரை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும், வனத்துறை மூலம், வெள்ளபாதிப்பு நேரங்களில் தேவைப்படும் சவுக்கு மரங்களை பொதுப்பணித்துறையினருக்கு வழங்கிடவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு தயார் செய்யும் உணவு மையங்களுக்கு தேவைககேற்ப விறகுகள் வழங்கிட வேண்டும்.

வட்டார போக்குவரத்து துறை மூலம், லாரிகள், டிரக், வேன்கள், பேருந்துகளை ஏற்பாடு செய்தி வேண்டும். மேலும், பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகள் கொண்டு செல்ல ஏதுவாக டிராக்டர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். பொது ப்பணித்துறையினர் தேவையான மணல் மூட்டைகள் மற்றும் மணல் கையிருப்பு வைத்திட வேண்டும். பொதுப்பணித்துறையினர் (செயற்பொறியாளர், கட்டிடங்கள் முற்றிலும் வலு குறைந்த அரசு கட்டிடங்கள் பள்ளி கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவைகளை அகற்றிட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக மூட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகள் சேதம் அடைந்த விவரத்தை உடனுக்குடன் மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்திட வேண்டும். மின்சார வாரியத்துறையினர், தாழ்வாக செல்லும், தொங்கும் மின்சார கம்பிகளை கண்காணித்து அறுந்து விடாமல் ஸ்டே அமைத்து பாதுகாக்க வேண்டும்.

சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிதாக மின்கம்பங்கள் அமைத்திட வேண்டும், மீன்வளத்துறையினர் மழை வெள்ளம் இதர பேரிட நிகழ்வுகள் ஏற்படும் சமயங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்திட வேண்டும். வேளாண்மைத்துறை செயற்பொறியாளர்) மூலம், மழை வெள்ளம் இதர பேரிடர் நிகழ்வுகள் ஏற்படும் சமயங்களில் புல்டோசர்கள், டிராக்டர்கள் மற்றும் பம்ப் செட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஊர்க வளர்ச்சித்துறையினர் (ஊராட்சிகள்)அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து அவசரப் பணிகள் மற்றும் சாலைகளில் ஏற்படும் அரிப்புகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் லலிதா அரசு அலுவலக அலுவலர்களுக்கு தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ முருகதாஸ், வேளாண்மை இணை இயக்குநர் சேகர், கலால் உதவி ஆணையர் நரேந்திரன், ஆர்டிஓக்கள் யுரேகா, அர்ச்சனா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் மஞ்சுளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்