பொது மேலாளர் ஆய்வு
9/22/2022 5:34:27 AM
சேலம், செப். 22: சேலம் ரயில்நிலையத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தார். திருப்பத்தூர்- ஈரோடு மார்க்கத்தில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா ஆய்வு செய்தார். அப்போது பொது மேலாளர் மல்லையா, சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர், அவர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம், எடைபார்க்கும் இயந்திரம், பார்சல் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.அப்போது, பாமக எம்எல்ஏ அருள், தமாகா நிர்வாகி சுசீந்திரகுமார் மற்றும் கருப்பூர் பகுதியைசேர்ந்த பொதுமக்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், சேலம்- சென்னை ரயில் பாதையில் உள்ள கருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதனை சீர் செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்று கொண்ட பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் கவுதம்ஸ்ரீனிவாஸ்,கோட்ட முதுநிலை வணிகமேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர். சேலம் ரயில் நிலையத்தில் ஆய்வை முடித்து கொண்டு, ஈரோடு ரயில் நிலையத்துக்கு சென்றார்.
மேலும் செய்திகள்
15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிப்பு சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள், புதிய நிர்வாகிகள்
விற்பனைக்கு குவிந்த அலங்கார தோரணங்கள்
வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா
5டன் பூமாலைகள் அனுப்பி வைப்பு
வெல்லம் விற்பனை சுறுசுறுப்பு
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 3.84 லட்சம் பேருக்கு சிகிச்சை
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!