கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு
9/22/2022 5:31:29 AM
கிருஷ்ணகிரி, செப்.22: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டசத்து மாத விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். இதில், ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும், வட்டார அளவில் வளரிளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களிடையே நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்கள், நகரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து கவனிக்கவும், வீட்டுத்தோட்டம் அமைக்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதேபோல், கிராம அளவிலான சமூக காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
மருத்துவக்குழு மூலம் 3 மாதத்திற்கு ஒருமுறை, மையக் குழந்தைகளுக்கு மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும். மிகவும் பலவீனமான, ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடி பணியாளர்களும், கிராமங்களில் உள்ள சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு, வீடாக சென்று பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 3 மாதங்களாக, நமது மாவட்டத்தில் தாய்-சேய் இறப்பு ஏதுமில்லை. குழந்தை திருமணத்தை தடுக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் குழந்தை திருமணத்தை தடுத்து, பெண் கல்வியை ஊக்குவித்து, பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பான மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சிறு தானியங்கள், பழ வகைகள், கீரை வகைகள், பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது குழந்தைகள் வரை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவு உண்பது குறித்தும், உள்ளூரில் கிடைக்ககூடிய உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கோவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி, தாசில்தார் சம்பத், பிடிஓ வேடியப்பன், சிஇஓ.,வின் நேர்முக உதவியாளர் பிரபாகர், பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன், புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கெலமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!