ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படிரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்க வலியுறுத்தல்
9/22/2022 5:23:38 AM
ஊட்டி, செப். 22: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி ரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சமி நில மீட்பு குழு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அதன் தலைவர் எமரால்டு சேகர், நீலகிரி எம்பிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு பல கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் தாட்கோ கடனுதவி பெற்றவர்களுக்கு கடன்கள் வழங்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கி மேலாளர்களும்,
கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், இயக்குநர்கள் சேர்ந்து தாட்கோ மூலம் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தொழில் செய்து வாழ்வாதாரம் உயரவும், விவசாயம் மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி ரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு தாமதமின்றி வழங்கிட அறிவுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
மேலும் செய்திகள்
3 சட்டமன்ற தொகுதிகளில் 51.08 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!