SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

9/22/2022 5:23:37 AM

சிவகங்கை, செப்.22:சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2022-2023ம் நிதியாண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்க தகுதியுடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதிகள் உடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட குடும்ப வருமானச்சான்று(ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்), அரசுப் பதிவு பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்றிதழ் (6 மாதம்), சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் கலர் போட்டோ ஆகியவற்றுடன் 15.10.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்