SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிடங்கு பராமரித்தல் பயிற்சி

9/22/2022 5:23:25 AM

சிவகங்கை, செப்.22: சிவகங்கை மாவட்ட குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மத்திய கிடங்கு மேம்பாடு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் ஆகியவை சார்பில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கு கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. கல்லல் வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் பொன்னையா வரவேற்றார். மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழக விரிவுரையாளர் முனைவர் அழகுபாண்டியன் பயிற்சியின் நோக்கம், சேமிப்பு கிட்டங்கிகளின் சட்டம்-2007 மற்றும் மின்னணு மாற்றுத்தக்க கிட்டங்கி ரசீது குறித்து பேசினார். மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஆய்வு அதிகாரி ரமேஷ் எதிர்கால உணவு தேவை குறித்தும், அறிவியல்பூர்வமாக அவற்றை சேமித்து வைப்பது மற்றும் தானியங்களை நுண்ணுயிரிகள், பூச்சிகள், எலிகள் போன்றவற்றிடம் இருந்து பாதுகாக்கும் முறை குறித்தும் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் விவசாயிகள், வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஓய்வுபெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்