SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓய்வூதியர்கள் நேர்காணலை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

9/22/2022 5:23:00 AM

சிவகங்கை, செப்.22: ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்க்க வருடாந்திர நேர்காணலை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களில் 2022ம் ஆண்டிற்கு இதுவரை நேர்காணல் செய்யாத ஓய்வூதியதாரர்கள் தங்களது வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலைக் கருவூலங்களில் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். நேர்காணலை முடிக்காதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட உள்ளது. எனவே ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்க்க நேர்காணலை விரைந்து முடிக்க வேண்டும். நேர்காணலுக்கு வரும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய புத்தகம், வங்கிகணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், கைபேசி ஆகிய ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்