SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல்

9/22/2022 5:22:03 AM

கோவை,செப்.22: கோவையில் பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக 5 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தினமும் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இதில் சராசரியாக 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏ, பி, சி என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சி நிலையிலுள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. சி நிலையில் உள்ளவர்களை மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல்,சளி,தொண்டை வலி,இருமல்,வாந்தி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். தீவிர பாதிப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளிடையே மேற்கொண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்