SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடைகள், நிறுவனங்களில் ஊழியர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி கட்டாயம்

9/21/2022 5:41:40 AM

சிவகங்கை, செப்.21:   சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள்(திருத்தம்) சட்டம், 2021ன்படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தங்களது பணி நேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும். எனவே, பணியாளர்களை பணியமர்த்தியுள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி சட்டத்திருத்தத்தினை கடைப்பிடிக்கத் தவறும் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடை நிறுவனச் சட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட வேண்டிய வேலையமைப்புப் பதிவேடு, சம்பளப் பதிவேடு, விடுப்பு விவரங்கள் பதிவேடு ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்