கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
9/21/2022 5:39:52 AM
சிவகங்கை, செப்.21: கட்டுமான தொழிலாளர்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமானத் துறையில் ஈடுபடும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தங்கள் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெறும் பொழுதே கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பின்னரே நலத்திட்ட உதவிகள் பெற இயலும். கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பதிவு செய்யவும் மற்றும் கூடுதல் விபரம் அறியவும் சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் 6 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: கலெக்டர் தகவல்
பரமக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா: எம்எல்ஏ வழங்கினார்
ஆட்டோ டிரைவரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மதநல்லிணக்க கந்தூரி திருவிழா
கடந்த 3 மாதங்களில் மீன்பிடி விதி மீறல்: 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்
தசரா திருவிழாவிற்காக வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!