போலி மதுபான ஆலை விவகாரத்தில் பெங்களூரை சேர்ந்த 2 பேர் கைது
9/21/2022 5:35:29 AM
ஈரோடு, செப். 21: ஈரோட்டில் போலி மதுபான ஆலை விவகாரத்தில் பெங்களூரை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை கடந்த 9ம் தேதி ஈரோடு மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் ஆலையில் இருந்து 26 வகை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, எலந்தகுளம் பள்ளர் தெருவை சேர்ந்த வீரபாண்டி (51), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முகேஷ் (38) மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மயிலாடுதுறையை சேர்ந்த அஞ்சான் மகன் சுமைதூக்கும் தொழிலாளியான அறிவழகன் (39) என்பவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அறிவழகனிடம் போலீசார் விசாரித்தபோது அவர் அளித்த தகவலின்படி, கர்நாடகா மாநிலம் பெங்களூர் வடக்கு சீதாராம்பாளையத்தை சேர்ந்த சசிகுமார் (46), பெங்களூர் நியூ பெல் சாலையை சேர்ந்த மோகன் (52) ஆகிய 2 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரும் போலி மது தயாரிக்க தேவையான ஸ்பிரிட் உள்ளிட்ட பல்வேறு மூல பொருட்களை வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். போலி மதுபான ஆலை விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
லாட்டரி விற்பனை : 3 பேர் கைது
பெரிய கொடிவேரியில் திமுக சார்பில் இருதய மருத்துவ முகாம்
பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது
9வது நாளாக அரசின் சாதனை விளக்க கண்காட்சி
பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!