சூரை ஊராட்சியில் பழுதான டிரான்ஸ்பார்மர்
9/21/2022 5:30:42 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் சூரை ஊராட்சியில் புழுதிவாக்கம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது, பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மர் தற்போது மிகவும் பழுதடைந்த காணப்படுகிறது. டிரான்ஸ்பார்மரில் உள்ள முக்கிய இயந்திரங்களை தாங்கிப் பிடிக்கக்கூடிய மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து அதன் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.
இதனால், இந்த டிரான்பார்மர் எப்போது வேண்டுமானாலும் விழும்நிலையில் உள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மின்சாரம் கம்பிகள் தாங்கிப் பிடிக்கப்பட்டு இருப்பதாகவும் இல்லையென்றால் இந்த டிரான்ஸ்பார்மர் எப்போதும் கீழே விழுந்திருக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பூக்கத்துறை மின்வாரிய அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மோசமான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் காரணமாக ஏதாவது விபத்து ஏற்பட்டால் அருகில் வசிக்கும் மக்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பங்கள் கொண்டு அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து புக்கத்துறை மின்சார வாரிய அலுவலக அதிகாரி சங்கரிடம் கேட்டபோது, ‘ இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!