கும்பகோணத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநாடு
9/20/2022 6:17:34 AM
கும்பகோணம், செப்.20: கும்பகோணம் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை தமிழ்நாடு, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மற்றும் பூக்கட்டுவோர் பேரவை தஞ்சை வடக்கு மாவட்ட மாநாடு மாவட்ட அமைப்பாளர் சக்தி செல்விஅம்மாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சூரியனார்கோவில் ஆதீனம் லமகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தஞ்சை ராமகிருஷ்ண மடம் தலைவர் ல விமூர்த்தானந்தா சுவாமிகள், கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்ஜி, சிவபுரம் மத வாயுசித்தர் ராமனுஜ தாசர் ஜீயர் சுவாமிகள், தொழிலதிபர் தர்வேம்பு ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
தொடர்ந்து சூரியனார்கோயில் ஆதீனம் லமகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தஞ்சை ராமகிருஷ்ண மடம் தலைவர் ல விமூர்த்தானந்தா சுவாமிகள், சிவபுரம் மத வாயுசித்தர் ராமனுஜ தாசர் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். தொழிலதிபர் தர்வேம்பு, கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், விஸ்வஇந்து பரிஷத் இணை செயலாளர் ராமசுப்பு, கோரக்கநாத சுவாமிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்ஜி நிருபர்களிடம் கூறியது: கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் ஓய்வு பெறாத பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் ரூ.2ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏழை எளிய பூஜாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வாக்கினை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. தற்போது கிராமக்கோயில் பூஜாரிக்கு ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் பேருக்கு என்று அறிவித்தனர். தற்போது இதில் பலர் உயிரிழந்துவிட்ட நிலையில் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் அதனை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று என்று கூறினார்.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!