நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
9/20/2022 6:10:07 AM
திருத்தணி, செப்.20: திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் பகுதியில் திருத்தணி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 2000க்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருத்தணி நகரை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்துநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, கூடுதல் மருத்துவர் நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
திருத்தணி அரசு பொது மருத்துவமனை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் முதியவர்கள் அதிக அளவில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்களில் காயம் அடையும் பலர், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். தமிழக அரசு, ஏற்கனவே இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயலாற்றி வருகிறது.
அந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அனைத்து கிராமங்களிலும் சர்க்கரை, ரத்த கொதிப்பு மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டால் அரசு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
நோயாளிகளுக்கு அலைச்சலும் குறையும். எனவே இவ்விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து கிராமங்களுக்கும் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை கொண்டு செல்லவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் நோயாளிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை
ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காய்கறி வியாபாரி அதிரடி கைது: பொன்னேரி போலீஸ் நடவடிக்கை
காட்டுப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ₹1.75 கோடி பறிமுதல்:' ஹவாலா பணமா விசாரணை
₹12.58 லட்சத்தில் புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடிகள்: கலெக்டர் திறந்து வைத்தார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!