நெல்லை மாநகராட்சியில் தார் சாலை பணிகள்: மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ ஆய்வு
9/20/2022 5:53:57 AM
நெல்லை, செப். 20: நெல்லை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு ெசய்தனர். நெல்லை சந்திப்பு புரத்தில் இருந்து ஊருடையான்குடியிருப்பு செல்லும் 1100 மீட்டர் சாலையானது மாநகராட்சி சார்பில் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் கழிவுநீரோடைக்கான பாலம் அமைப்பு பணிகள் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
இதனால் அச்சாலையில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் ஒரு சில வாரங்களாக வியாபாரமின்றி திண்டாடினர். இதுகுறித்து தெரியவந்ததும் நெல்லை மாநகராட்சி சார்பில் நெல்லை சந்திப்பு புரத்தில் இருந்து தச்சநல்லூருக்கு செல்லும் ஊருடையான் குடியிருப்பு சாலையில் சாலைப் பணிகளை மேயர் பி.எம்.சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். குறிப்பாக அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் அமைப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது 14வது வார்டு கவுன்சிலர் கீதா ராஜையா, நெல்லை ஹைரோடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சிலுவை பிச்சை,
செயலாளர் தனசேகரபாண்டியன், பொருளாளர் சிவபாலன், இணைச் செயலாளர் குமரேசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பெர்டின் ராயன், அலிசேக்மன்சூர் ஆகியோர் சாலையை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறந்துவிட்டு புரம் சாலையில் முன்பு போல் வியாபாரம் நடக்க ஆவனசெய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட மேயர் பி.எம். சரவணன், பாலம் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார். மேலும் இதன் ஒருபகுதியில் பணிகளை துரிதமாக முடித்து வரும் 25ம் தேதி (சனிக்கிழமைக்குள்) பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது தச்சை மண்டல தலைவர் ரேவதி பிரபு, செயற்பொறியாளர் வாசுதேவன், கவுன்சிலர்கள் உலகநாதன், மாரியப்பன், அலி சேக்மன்சூர், உதவி கமிஷனர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, உதவிப் பொறியாளர் பட்டுராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதே போல் பேட்டை- பழைய பேட்டை இணைப்பு சாலையில் சரக்கு வாகன முனையம் முதல் பேட்டை வரையிலான 1 கிமீ தொலைவுக்கு தார் சாலை அமைக்கும் பணியையும் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ ஆகியோர் துவக்கிவைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்து முதியவர் பலி
தென்காசி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிக்காக நூறாண்டு மரங்கள் வெட்டி அகற்றம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பழவூரில் கண்களை கட்டிக் கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
கடையம் அருகே 20 யானைகள் மீண்டும் அட்டகாசம் எதிரொலி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோலார் மின்வேலி
உரம் வாங்க செல்லும் போது சாதியை கேட்கும் அவலம் நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் தருவதில் காலதாமதம் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஏப்.5ல் உள்ளூர் விடுமுறை
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்