SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர் வாழ்வு சான்றை புதுப்பிக்க தவறினால் ஓய்வூதியம் நிறுத்தம்

9/20/2022 5:50:43 AM

நாகப்பட்டினம், செப்.20: நாகப்பட்டினம் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியர்கள் பெறுபவர்கள் பதிவை புதுபிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கு 2022ம் ஆண்டு வருடாந்திர நேர்காணல் பெற வேண்டும். (ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை) ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெற்று வரும் சம்மந்தப்பட்ட மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூல அலுவலகங்களில் நேரில் ஆஜராகி தங்களின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

நேரில் ஆஜராக இயலாதவர்கள் அஞ்சல் துறை மூலம் அந்தந்த பகுதி அஞ்சல் துறை ஊழியர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி ஓய்வூதியர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் “ஐறிவன் பிரமான்” வாழ்வுச் சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் இணைய வழி சேவையின் வாயிலாக அரசு இ-சேவை மையங்கள் மூலமாக நடப்பு ஆண்டிற்கான நேர்காணல் செய்து தங்களின் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றில் பதிவு செய்ய இயலாதவர்கள் உயிர் வாழ்வுச்சான்றின் மூலம் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். பதிவை புதுப்பிக் தவறிய ஓய்வூதியர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

வேதாரண்யம், செப்.20:தலைஞாயிறு அருகே கூரை வீடு தீயில் எரிந்து சேதமடைந்ததில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்தது. வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சிமூலை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (50). இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த குடும்பத்தினர் அனைவரும் வெளியே ஓடிவந்தனர்.  இருப்பினும் தீவிபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துவிட்டது. தீவிபத்து குறித்து தகவலறிந்த தலைஞாயிறு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவமால் அணைத்தனர் தீவிபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்திற்கு தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்