SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்தை அபகரித்துக்கொண்டு மூத்தமகன் கொடுமைப்படுத்துகிறார் எங்களை கருணை கொலை செய்ய உத்தரவிடுங்கள்

9/20/2022 5:50:26 AM

மயிலாடுதுறை, செப்.20: மூத்தமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது, எங்கள் இருவரையும் கருணைக் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். மயிலாடுதுறை தாலுகா கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கசாமி(85) சாரதாம்பாள்(75) தம்பதியினர். இவர்களுக்கு 4 மகன்கள். கடந்த 2009ம் ஆண்டு தனது 4 மகன்களுக்கும் தலா ஒரு ஏக்கர் 100 குழி விவசாய நிலத்தையும், குடியிருக்க மனையையும் பிரித்து தங்கசாமி சொத்து எழுதி கொடுத்துள்ளார். மேலும் தனக்கென 1 ஏக்கர் 100 குழி நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையையும் வைத்துக்கொண்ட தங்கசாமி அதில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிவரும் தங்கசாமியின் மூத்தமகன் உத்திராபதி தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயரில் மாற்றி எழுதிக்கொண்டாராம். அதன்பின்னர், பெற்றோரை அவர்கள் இருந்த வீட்டில் இருந்து அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உத்திராபதி பொருட்படுத்தாமல் தனது பெற்றோரை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தங்கசாமி தனது சொத்துக்களை பெரிய மகனுக்கு மட்டும் எழுதித்தந்து விட்டதால் அவரை பராமரிக்க மற்ற மகன்கள் முன்வரவில்லை. இதையடுத்து தம்பதியினர் இருவரும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே தங்கி தங்களது முதுமைக் காலத்தை கழித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் தம்பதியினர் பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த தம்பதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்களிடம் பாதிக்கப்பட்ட தம்பதியினர் தங்கள் இடத்தை மீட்டுத்தரவும், அவ்வாறு இல்லாவிட்டால் தங்களை கருணைக்கொலை செய்ய வலியுறுத்தியும் மனு அளித்தனர். இதையடுத்து, அம்மனுவை ஆர்டிஓவுக்கு பரிந்துரைத்த கலெக்டர் மனுவின் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்