SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனவ பெண் தொழிலாளர்களை அரசு பாதுகாத்திட வேண்டும்

9/20/2022 5:49:50 AM

நாகப்பட்டினம்,செப்.20: மீனவ பெண் தொழிலாளர்களை அரசு பாதுகாத்திட வேண்டும் என ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னதம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் கடல் வளம் மற்றும் உள்நாட்டு மீன் வளத்தையே நம்பி மீன் விற்பனை தொழிலையே பிரதான தொழிலாக செய்து அன்றாட வாழ்க்கை லட்சக்கணக்கான மீனவ பெண்கள் செய்து வருகின்றனர். மீனவ தொழிலாளர்கள் தலையில் சுமையாக மீன்களை எடுத்து சென்று தெருக்களிலும், சாலை ஓரங்களிலும் அன்றாட மீன் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.

இதனால் கடும் வெயில், மழையில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பிடித்து வரும் மீன்களை மீன் மார்க்கெட்டிலிருந்து விற்பனைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய தனி பஸ் வசதி இல்லை. மீன் விற்பனை செய்யக்கூடிய மீன் மார்க்கெட் உள்ள ஒரு சில இடங்களைத் தவிர அதிகமான மாவட்ட இடங்களில் முறையாக மீன் மார்க்கெட் இல்லாமல் மீன்களை இருப்பு வைப்பதற்கான குளிர்சாதன பெட்டியோ, நல்ல குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லாமல் மீனவ பெண் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் துன்பப்படுகின்றனர்.  

அத்தொழிலாளர்களை பாதுகாத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் மீன்வளத்துறை மூலம் ஆய்வு நடத்தி நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்சி என வகைப்படுத்தி அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் மீன் மார்க்கெட் அமைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மீன் விற்பனை செய்யும் பெண் தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும். அந்நிய செலாவணி ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் முதல்வர் கோரிக்கையை ஏற்று காலதாமதம் இன்றி நிறைவேற்றித் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்