SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயாரிப்பாளர்கள் கவலை அமராவதி அணை நீர்மட்டம் உச்சத்தை தொட்டது

9/20/2022 5:49:41 AM

உடுமலை, செப். 20: அமராவதி அணை நீர்மட்டம் நேற்று உச்சத்தை தொட்டது. மொத்தமுள்ள 90 அடியில் நீர்மட்டம் 89.94 அடியாக இருந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர, கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான அளவு நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு (2021) தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் அமராவதி  அணை நிரம்பி, 7 முறை உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மத்தியில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஜூலை 15-ம்தேதி நீர்மட்டம் 88 அடியை தாண்டியதால் 9 கண் ஷட்டர்கள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதியும் 8 ஷட்டர்கள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 85 அடியை தாண்டினாலே 9 கண் ஷட்டர் வழியாக நீர்கசிந்து வெளியேறி தொடங்கிவிடும். அந்த வகையில் கடந்த 64 நாட்களாக நீர்மட்டம் 87 அடிக்கு மேல் இருப்பதால், 9 கண் ஷட்டர்கள் வழியாக தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், நேற்று அணையின் நீர்மட்டம் உச்சபட்ச அளவான 89.94 அடியை தொட்டது. இதற்கு முன்பு 2020-ல் அதிகபட்சமாக 89.90 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. தற்போது அதையும் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் அணை நீர்மட்டம் 88.56 அடியாக இருந்தது. தற்போது அணைக்கு 901 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 869 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்