வ.உ.சி. மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் திறப்பு
9/20/2022 5:38:50 AM
ஈரோடு, செப். 20: ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையத்தினை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் திறந்து வைத்தார்.
ஈரோடு மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி. மைதானத்தில் தற்காலிக காய்கறி மற்றும் பழ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி குடிநீர் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், 36வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், தி.மு.க. பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விற்பனை நிலையத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் உள்ளதாகவும், ரூ.1 செலுத்தினால் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், ரூ.100 செலுத்தி ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொண்டால், ரூ.7க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் செய்திகள்
ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது
சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு
மொடக்குறிச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பவானி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!