கலெக்டர் அலுவலக குறைதீர் முகாமில் 498 மனுக்கள் அளித்த மக்கள் உடனடியாக தீர்வுகாண கலெக்டர் அறிவுறுத்தல்
9/20/2022 5:34:11 AM
மதுரை, செப்.20: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பொமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 37 மனுக்களும், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி 17, சாதிச்சான்றுகள் கேட்டு 4, நிலம் தொடர்பாக 41, குடும்ப அட்டை தொடர்பாக 8, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பாக 78 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், வேலைவாய்ப்பு கோரி 49 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி (சாலை, தெருவிளக்கு, தண்ணீர் குழாய், பேருந்து வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) 16, புகார் தொடர்பாக 45, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 7, திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பாக 15, பென்சன் நிலுவைத்தொகை, ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பாக 2, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், ராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பாக 94 மற்றும் இதர மனுக்கள் 85 என மொத்தம் 498 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சவுந்தர்யா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்
சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி
மதுப்பாட்டில்கள் பறிமுதல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!