SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: மரக்கால் மூலம் நெல் அளந்து விவசாயிகளிடம் கொள்முதல்

9/13/2022 5:53:38 AM

கொள்ளிடம்,செப்.13: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு கொள்ளிடம் ஒன்றிய பகுதியிலுள்ள மாதானம், பழைய பாளையம், வேட்டங்குடி,குடமுறட்டி, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் அருகே உள்ள மாதிர வேளூர் கிராமத்தில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு கொள்முதல் நிலையம் திறக்கும்போது விவசாயிகளிடமிருந்து நெல்லை பழைய முறையில் ஆன மரக்காலை பயன்படுத்தி முதன்முதலாக கொள்முதல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று மாதிர வேளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து முதலில் விவசாயியிடம் இருந்து வாங்கப்படும் நெல் பழைய அளவீட்டு முறையான மரக்கால் மூலம் நெல் அளந்து கொள்முதலை ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல் கொள்முதல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கொள்முதல் நிலையத்தின் மூலம் இந்த குறுவை அறுவடை செய்யப்பட்ட நெல் சுமார் 15,000 டன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வெறும் தரையில் அடுக்கி வைக்காமல் பாதுகாப்பாக வைப்பதற்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நெல் மூட்டைகளை அதிகாரிகளின் ஆலோசனையின் படி முறையாக அடுக்கி வைக்கும் பணி நடைபெற தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்