தூயகாற்று தின விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
9/13/2022 3:37:53 AM
நெல்லை, செப்.13: சர்வதேச தூய காற்று தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காற்று மாசுபாடு காரணமாக பூமியின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் மற்றும் காலநிலைகளும் மோசமாக பாதிக்கப்படுகிறது. எனவே மாசற்ற காற்று மனிதர்களுக்கு மட்டுமல்ல, பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இதையொட்டி நீலவானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காற்று தினத்தை முன்னிட்டு நேற்று கலெக்டர் விஷ்ணு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுயம்பு தங்கராணி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நக்கீரன், உதவி பொறியாளர் சசிரேகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த வாகனத்தின் மூலம் நெல்லை மாநகர பகுதியில் உள்ள புதிய பஸ்நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
மேலகரம் பள்ளியில் இலவச சைக்கிள்கள்
கிராமங்களில் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்ற சிவபத்மநாதன் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்கு அடவிநயினார் அணையில் தண்ணீர் திறப்பு
களக்காட்டில் ஜென்ட்ஸ் டெர்மினல் கடை திறப்பு விழா
கூட்டுறவு சங்கத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயற்சி: முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!