ரூ.லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்துடன் தந்தை பெரியார் விருது பெற அக்.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
9/10/2022 2:53:54 AM
தஞ்சாவூர், செப்.10: ரூ.லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்துடன் தந்தை பெரியார் விருது பெற அக்.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2022 ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31ம் தேதி. மேலும், விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!