குழாயில் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் ஆறாக ஓடிய குடிநீர்
9/7/2022 5:39:48 AM
நெல்லை, செப். 7: குழாயில் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் நேற்று குடிநீர் ஆறாக ஓடியது. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நெல்லை மாநகராட்சிக்கு விரைவில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பல்வேறு குடிநீரேற்று நிலையங்களில் தண்ணீர் ஏற்றப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விரைந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகன்குறிச்சியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை நெல்லை சந்திப்பில் காணப்படும் தச்சை மண்டல பழைய அலுவலக குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றும் பணிகள் நடந்தன. அப்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது. நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை, அதையொட்டியுள்ள போக்குவரத்து போலீஸ் நிழற்குடை ஆகியவற்றின் அருகே தண்ணீர் குளம் போல் தேங்கியது. மேலும் அப்பகுதியில் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், தண்ணீர் வெளியேற வழியின்றி காணப்பட்டது. நெல்லை சந்திப்புக்கு வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிதந்தபடியே சென்றன. மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து குடிநீரை வடிய வைக்கும் முயற்சியில் இறங்கினர்.
மேலும் செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல் துணைப்பதிவாளர் தகவல்
குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
3 தினங்கள் இரவில் பேட்டை அருகேயுள்ள ரயில்வே கேட் மூடல்
அச்சங்குட்டத்தில் சர்ச் கட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
சிவகிரி அருகே செங்கல் சூளையில் மது விற்ற மேற்கு வங்க வாலிபர் கைது
களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திரளானோர் பங்கேற்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!