தொடர் மழையால் வேகமாக நிரம்பும் ரேலியா அணை
9/7/2022 2:46:11 AM
குன்னூர், செப்.7: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை நிரம்பி வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது ரேலியா அணை. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குன்னூர் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்ந்து
வருகிறது. ரேலியா அணை 43 அடி உள்ள நிலையில் தற்போது 41 அடிக்கு மேல் தண்ணீர் நிறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
3 சட்டமன்ற தொகுதிகளில் 51.08 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!