செந்துறை அருகே ஆதிக்குடிக்காடு திரவுபதை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
9/6/2022 6:21:55 AM
அரியலூர், செப்.6: செந்துறை அருகே ஆதிக்குடிக்காடு கிராமத்தில் உள்ள திரவுபதையம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஆதிகுடிக்காடு கிராமத்தில் விநாயகர், திரௌபதி அம்மன், வீரகந்தம் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜைகள் 2 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கடம் புறப்பாட்டுடன் மேள வாத்தியங்கள் முழங்க கோபுர உச்சிக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பத்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செயதனர்.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்
அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!