தூத்துக்குடி கடலில் விநாயகர் சிலை கரைப்பு
9/3/2022 5:20:48 AM
தூத்துக்குடி,செப்.3: தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வழக்கம் போல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் விநாயகர் சிலை லாரியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சிக்கு உத்திரபாண்டி தலைமை வகித்தார். தூத்துக்குடி பழைய மாநகர இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் ஞானமணி ஆசீர்வாதம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாயகர் சிலை ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக திரேஸ்புரம் வடபாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கடற்கரையை வந்தடைந்தது. அங்கு படகு மூலம் விநாயகர் சிலை கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்லத்துரை, அகஸ்டின் தங்கராஜ்,ராஜேஷ் குமார், ஜெயக்குமார், ஆனந்த் பொன்ராஜ், நயினார், கண்ணன், லோகநாதன், அருண்குமார், ராஜ் ,ஹரி பாலகிருஷ்ணன் திரளான வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவனுக்கு இன்று வரவேற்பு
தூத்துக்குடி தசரா திருவிழா சப்பர பேரணி வழித்தடம் சீரமைக்க மேயரிடம் கோரிக்கை
பாளை. சிறையில் முதியவர் திடீர் சாவு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி மாவட்ட பஞ். தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமனம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!