கல்வி கடன் வழங்க கோரி எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
9/3/2022 3:22:52 AM
மன்னார்குடி, செப்,3: மன்னார்குடியில் முகவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்க கோரி எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்தி மருத்துவ காப்பீட்டை அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும். முகவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் வழங்குவதோடு வீட்டு வசதிகடன் 5 சதவீத வட்டியில் வழங்க வேண்டும். முகவர் நலநிதி அமைத்து, தொழில் முறை முகவராக அங்கீகரித்து பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பாலிசிக்கான போனஸ் உயர்த்தி பாலிசி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதி அளித்து பாலிசி மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரர்களுக்கு ஏதுவாக சேவை வழங்க வேண்டும். 5 வருடம் சிஎல்ஐஏ முடித்தவர்களுக்கு மன்ற விதிகளில் இருந்து விலக்கு அளித்து, சிஎல்ஐஏ மூலம் வரும் அனைத்து விதமான வருமானத்தையும் முன்பணம் பெறுவதற்கு கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் கிளை தலைவர் மகாலிங்கம் தலைமையில் மன்னார்குடி கோட்ட எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் பாண்டியன், பொருளாளர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணைத்தலைவர் செளந்திரம் பேசினார். ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!