மானாமதுரை அருகே பருவ மழைக்கால பேரிடர் மீட்பு ஒத்திகை
9/3/2022 2:47:53 AM
மானாமதுரை, செப். 3: மானாமதுரை அருகே கள்ளர்வலசை கிராமத்தில் மழை, வெள்ளக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தற்போது தொடர்ந்து மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்தாண்டு மழைக்காலத்தில் மானாமதுரை உப்பாற்றில் வந்த வெள்ளத்தால் செய்களத்தூர், கள்ளர்வலசை உள்ளிட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. இந்தாண்டு மானாமதுரை உப்பாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மானாமதுரை தீயணைப்புத்துறை சார்பில் தாசில்தார் சாந்தி முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் கள்ளர்வலசை உப்பாற்றில் அவசரகால பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆறு, கண்மாய்களில் தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்து வீரர்கள் செயல் முறை விளக்கம் செய்து காட்டினர். ரப்பர் படகில் சென்று மீட்பு பணி செய்வது, ரப்பர் வளையத்தைக் கொண்டு தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வது குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
மேலும் செய்திகள்
மடப்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு சாலை மறியல் போராட்டம்
காரைக்குடி நகராட்சி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு அதிரடியாக வீட்டுக்குள் நுழையும் அவலம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய்கள் தூர்வாரப்படும் நகராட்சி சேர்மன் உறுதி
தேவகோட்டையில் வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தம்
அண்ணாமலை பல்கலையில் தொலைதூரக்கல்வி சிறப்பு தேர்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி