மதுரையின் புதிய மத்திய சிறை அமையவுள்ள இடையபட்டி இடத்தை டிஜிபி நேரில் ஆய்வு
8/26/2022 7:43:26 AM
மதுரை, ஆக. 26: தென்மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்கக்கூடிய மதுரை மத்திய சிறைச்சாலை, கடந்த 1865ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 157 ஆண்டுகள் பழமையான இச்சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக போதுமான வசதியின்மை, நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வசதிகளை மேம்படுத்த இடப்பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதனால் மத்திய சிறையை, மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிக்கு மாற்றம் செய்ய சிறை நிர்வாகம் கோரிக்கை வைத்து வந்தது.
அதனை ஏற்ற தமிழக அரசு, மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்குட்பட்ட இடைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மதுரை மத்திய சிறைச்சாலை அமைப்பதற்காக 85 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், சென்னையில் உள்ள புழல் சிறைக்கு இணையாக அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளுடன் சிறைச்சாலை கட்டப்பட உள்ளது. விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், பெண்கள் சிறை மற்றும் நூலகங்கள், தொழிற்சாலைகள், பிரமாண்ட சமையல் கூடங்கள், காவலர் குடியிருப்பு, காவலர் அங்காடி, தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாக்குகளுடன் பசுமையான முறையில் மதுரை மத்திய சிறை அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி விசுவநாதன், மதுரை மத்திய சிறைக்காக புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் சிறைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்தனர்.
மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்
சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி
மதுப்பாட்டில்கள் பறிமுதல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!