திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற மகள் திடீர் மாயம்; போலீசில் தாய் புகார்
8/23/2022 6:15:06 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் தேவி (39). இவரது கணவர் மாரி. இவர்களது மகள் கீர்த்தனா(21). பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் கடந்த 10 நாட்களாக பூச்சி அத்திப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த இரு தினங்களுக்கு முன் காலை வீட்டிலிருந்த புறப்பட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் வரை கீர்த்தனா வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த தாய் தேவி, கீர்த்தனாவின் தோழிகளிடம் விசாரித்துள்ளார். எங்கும் வராததால் தேவி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை
ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காய்கறி வியாபாரி அதிரடி கைது: பொன்னேரி போலீஸ் நடவடிக்கை
காட்டுப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ₹1.75 கோடி பறிமுதல்:' ஹவாலா பணமா விசாரணை
₹12.58 லட்சத்தில் புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடிகள்: கலெக்டர் திறந்து வைத்தார்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!