SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: நெல்லையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

8/13/2022 5:56:01 AM

நெல்லை: ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு  முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர்  மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து வீடுகளிலும்  மூன்று நாட்கள் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சுதந்திர  போராட்டத்தில் பங்கு பெற்ற 75 தலைவர்களை தேர்வு செய்து அவர்கள்  நினைவிடங்களுக்கு சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தவும், அவர்களின்  குறும்படங்களை ஒளிபரப்பவும், அவர்களது குடும்பத்தினரை கவுரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எட்டயபுரத்தில்  உள்ள பாரதியின் நினைவிடத்திற்கு சென்று மாலையணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. இதைத் தொடர்்ந்து அவர்களின் வாரிசுகளையும்  கவுரவப்படுத்தினோம். நாளை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 தினங்கள் தேசியக்  கொடியை வீடுகளில் ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகிறோம். தமிழகம் முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி தேசியக் கொடியை  ஏற்றுவதற்கான விழிப்புணர்வு அணிவகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 75வது சுதந்திர தினத்தையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு  நாச்சியார் உள்ளிட்ட 75 சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை  செலுத்தப்படுகிறது. நாட்டு மக்களிடம் தேச பக்தியை ஏற்படுத்த உரிய  நடவடிக்கைகளை பா.ஜ. எடுத்துள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள்  மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல லட்சம் இளைஞர்கள்  தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளனர்.

2047ம் ஆண்டு 100வது சுதந்திர விழா தினத்தில் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து  வருகிறார். ஒண்டி வீரன் நினைவு தினம் வரும் 20ம் தேதி  கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒண்டி வீரனை  பெருமைப்படுத்தும் வகையில் நெல்லையில் அன்று அவரது தபால்தலை   வெளியிடப்படுகிறது.

போதை ஒழிப்பு திட்டத்தில் முதலாவதாக டாஸ்மாக்கை மூட  வேண்டும். அப்போது தான் போதை ஒழிப்பு திட்டம் முழுமை பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது  நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட  பார்வையாளர் நீலமுரளி யாதவ் மற்றும் நிர்வாகிககள் கணேசமூர்த்தி, குணசேகரன்  ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்