SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகப்பட்டினம் பழைய ஆயுதப்படை மைதானத்தில் திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் வாகனங்கள் சாம்பல்

8/12/2022 1:22:58 AM

நாகப்பட்டினம், ஆக.12: நாகப்பட்டினம் காடம்பாடி பகுதியில் பழைய ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் இயங்கிவந்த வெளிப்பாளையம் காவல் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் கோர்ட் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.

அப்பகுதியில் கரும்புகை மண்டலத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விரைந்து வந்த நாகப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் விட்டு அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் தீயில் கருகி நாசமானது. இது பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்