SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழையாறு துறைமுகத்தில் 5,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை

8/12/2022 1:22:45 AM

கொள்ளிடம், ஆக.12: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான நீர் மிகவும் வேகத்துடன் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது. தண்ணீர் அதிவேகத்துடன் சென்று கடலில் கலந்து வருவதால், பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் உள்ளிட்ட அனைத்து படகுகளையும் கடலுக்குள் இயக்கி சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படகை ஓட்டி சென்றால் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருப்பதால் படகு கவிழும் அபாய நிலை உள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக அனைத்து படகுகளும் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மற்றும் துறைமுக வளாகத்தில் வலை பின்னுதல், மீன் விற்பனை செய்தல், மீன்களை வகைப்படுத்துதல்,கருவாடு உலர வைத்தல்,ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இன்றி வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் வேலையின்றி இருந்து வரும் மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று படகு உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்